இதற்கான சித்த மருந்துகள்: அமுக்கரா சூரணம் 1 கிராம், முத்துச்சிப்பி பற்பம் 200 மி.கி., நாக பற்பம் 100 மி.கி., எடுத்து தேன், பால் அல்லது வெந்நீரில் மூன்று வேளை சாப்பிடலாம். பாதிக்கப்பட்ட பகுதியில் எட்டித் தைலம் தேய்க்கலாம். அரிப்பு இருந்தால் அருகன் தைலமும், புண் இருந்தால் பச்சை எண்ணெய்யும் அந்த இடத்தில் போடலாம். அவுரியை அரைத்து வெரிகோஸ் வெய்ன் பிரச்சினை உள்ள இடத்தில் கட்டலாம்.
சிறப்பு சிகிச்சையாக "அட்டை விடுதல் சிகிச்சை" செய்யலாம். இது சித்தர் பெருமான் அகத்தியர் அருளியது. இந்த சிகிச்சையில் வலி இருக்காது. தொடர்ந்து அட்டை விடும் போது இந்த வெரிகோஸ் வெய்ன் பிரச்சினை நன்றாக சரியாகிவிடும். இது ஒரு பாதிப்பில்லாத எளிய சிகிச்சை முறை. பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவமனையில் இந்த சிகிச்சை இலவசமாக கிடைக்கும். வெரிகோஸ் வெய்ன் பாதிப்புள்ளவர்கள் நெடுந்தூரம் நடக்கும் போது அல்லது வெகு நேரம் நிற்கும் போது பாதிக்கப் பட்ட இடத்தில் இறுக்கமாக துணி அல்லது பேண்டேஜ் கட்டுவது நல்லது.
சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)